துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் - விமான நிலையத்தில் ஈபிஎஸ்-ஐ பார்த்து பயணி ஒருவர் திடீர் கோஷம்
மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன்னுடன் விமான நிலைய பேருந்தில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடிக்கு எதிராக கோஷம்
சிவகங்கையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்றார் எடப்பாடி பழனிசாமி இன்று ( 11-03-23) காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் விமான நிலையம் வந்தடைந்தார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் ஏறி விமான நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேருந்தில் சென்ற சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பியவர் சிங்கப்பூர் பயணியின் உறவினர்கள் அமமுகவை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.