இந்திய அணியின் அடுத்த அடுத்த முக்கிய மாற்றங்கள்! உருளப்போகும் முக்கிய தலைகள்!!
இந்தியக்கிரிக்கெட் அணி நடைபெற்று முடிந்த இருபதுக்கு இருபது உலகக்கிண்ண தொடரை தோல்வியுடன் நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் அணியை மறு சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. விராட் கோலி அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறி இருக்கும் நிலையில் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான நிரந்தர அணித்தலைவராக யார் நியமிக்கப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் ஷர்மா அணித்தலைவராகவும் ராகுல் உதவித்தலைவராகவும் செயற்பட்டாலும் தொடர்ந்து அவர்களே அந்த பொறுப்பில் இருப்பார்களா?
அடுத்த உலகக்கிண்ணத்துக்குள் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா?
தேசிய அகாடமியில் பயிற்றுவிப்பாளராக தனது பணியை வெற்றிகரமாக செய்து இளம் வீரர்களை உருவாக்கிய டிராவிட் அணியின் பயிற்றுவிப்பாளாராகி இருக்கிறார். டிராவிட்டின் இடத்தை லக்ஸ்மன் நிரப்புகிறார். இந்த நியமனங்கள் சரியான முடிவுகளாக இருக்குமா?
வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அது தொடர்பான மேலதிக விபரங்களை இந்தக் காணொளி ஆராய்கின்றது.