அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி : பள்ளி நேரத்தில் மாற்றம் வருகிறதா ?

M K Stalin
By Swetha Subash May 07, 2022 10:12 AM GMT
Report

மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாசித்தார்.

அதில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டத்தை கொண்டுவரும் விதமாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் முதற்கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி : பள்ளி நேரத்தில் மாற்றம் வருகிறதா ? | Changes In Government School Timing Snacks Served

மேலும், மற்ற அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதனால் அரசு பள்ளிகளில் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், வருகிற ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளி வளாகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகளை நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.