எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா : அணியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் இங்கிலாந்து

cricket change england
By Irumporai Jan 02, 2022 09:10 AM GMT
Report

கிரிக்கெட் போட்டியினை கண்டுபிடித்தவர்களாக கூறிக் கொள்ளும் இங்கிலாந்து தங்கள் அணியில் மாற்றங்களை கொண்டு வர உள்ளது.

தங்களது உயிரையும் மேலாக நினைக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்துவிட்டது. இதனால் இங்கிலாந்தில் பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர் இங்கிலாந்து அணி எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு தான் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கும்.

2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதே போன்று நடப்பாண்டில் 15 டெஸ்ட்களில் இங்கிலாந்த பங்கேற்கிறது. 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததை அடுத்து, அணியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

அதன் விளைவாக 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்த அணி வென்றது. டெஸ்ட் போட்டியை மட்டும் கவனம் செலுத்தும் அணி என்று இருந்த பிம்பத்தை இங்கிலாந்து அணி மாற்றியது.

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இங்கிலாந்து அணி அதிக கவனம் வெலுத்தி வருவதாகவும், டெஸ்ட் போட்டியில் கோட்டை விட்டதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து விட்டன. இதனையடுத்து டெஸ்ட் அணியில் பல மாற்றங்களை கொண்டு வர இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்களை அணியின் நிர்வாகிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மேலும் ஜோ ரூட்டை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. மேலும் டெஸ்ட்க்கு என்று தனி வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.