ராஜராஜ சோழன் இந்து அரசனா? : இயக்குநர் வெற்றிமாறன் எதிர்ப்பு

Vetrimaaran
By Irumporai Oct 02, 2022 11:26 AM GMT
Report

 வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ராஜராஜ சோழன் இந்து அரசனா? : இயக்குநர் வெற்றிமாறன் எதிர்ப்பு | Changed Raja Raja Cholan As Hindu Vetrimaaran

சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது என கூறினார்.

ராஜராஜ சோழன் இந்து அரசன்

மேலும், இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.

ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம் , நான் என்னால் முடிந்த சிறிய அளவிலான பங்களிப்பை கொடுப்பேன். கண்டிப்பாக நீங்கள் அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடக்காது என கூறினார்.