இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே இதை மாற்றலாம் - ரொம்ப ஈஸி!

Indian Railways
By Sumathi Oct 08, 2025 07:47 AM GMT
Report

டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதி அறிமுகமாகவுள்ளது.

டிக்கெட் கேன்சல்

ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் புதிதாக புக் செய்ய வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது.

indian railways

இந்நிலையில், டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் தொடங்கும்.

புதிய வசதி

அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இனி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே இதை மாற்றலாம் - ரொம்ப ஈஸி! | Change Travel Date Without Canceling Train Ticket

வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.