ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

india money bank governor
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுத்த எப்போதும் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இன்று தலைநகர் டெல்லியில் நிதிக்கொள்கை குழுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், ரெப்போ வட்டி விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே இருக்கும் எனவும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்பது குறிப்பிடதக்கது.