அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றம்

India
By Sumathi 1 மாதம் முன்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்னிபாத் 

அக்னிபாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படவில்லையென்றாலும், அக்னி வீர் என்றழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றம் | Change In The Selection Process Of Agnipath Scheme

இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 40,000 பேரை அக்னித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள். 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

புதிய மாற்றம்

முதற்கட்டமாக ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடைபெறும். இதில் 25 சதவீதம் மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டமான உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதற்கட்ட நுழைவுத் தேர்வு மூலம் நிர்வாகத்தினருக்கான செலவு குறைவது மட்டுமின்றி, புத்திக் கூர்மையுள்ள ஆட்களும் ராணுவத்திற்கு கிடைப்பார்கள்.

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதி கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். முதற்கட்ட நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம், நாடு முழுவதும் சுமார் 200 இடங்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.