ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது, வந்த பிறகு முதல்வர் சிறை செல்வது உறுதி : குமரியில் முழங்கிய ஸ்டாலின்

dmk stalin aiadmk Kanyakumari eadppadi
By Jon Mar 22, 2021 12:32 PM GMT
Report

கன்னியாக்குமாரி மாவட்டத்தில் தக்கலை அண்ணா சிலை முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின். கன்னிக்குமாரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞரின் மகன் வந்திருக்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின் ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது, வந்த பிறகு முதல்வர் சிறை செல்வது உறுதி என் ஸ்டாலின் பேசினார். மேலும், பழனிச்சாமி தனது உறவினர்களுக்கு விதிகளை மீறி டெண்டர்கள் வாங்கி கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டிய ஸ்டாலின்.

ஒட்டு மொத்தமாக பாஜக வின் கிளை கழகமாக அதிமுக இருப்பதாக விமர்சனம் செய்தார்.