வேட்பாளரை மாற்றாவிட்டால் தோல்வி தான்: அதிமுகவினரின் பரபரப்பு போஸ்டர்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளும் தொகுதி பட்டியல், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என போட்டி போட்டு கொண்டு செயல்பட்டு வருகிறது. அத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் கூறி தீவிரமாக பரப்புரையில் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தூசி கே.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அப்பகுதி கட்சி நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அப்படி மாற்றினால் தான் வெற்றி கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அதிமுக தூசி கே. மோகனை தவிர வேறு வேட்பாளரை அறிவித்தால் வெற்றி நிச்சயம் என அச்சடிக்கப்பட்டுள்ளது.