சந்திரயான் 3: பிரக்யான் ரோவர் நிலவில் தடம் பதிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது ISRO!
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.
வீடியோ வெளியீடு
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் அழகிய காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இப்போது இந்தியர்கள் மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அனைவராலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan