விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து சந்திரயான் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவிய விநாயகர்!

Chennai India Vinayagar Chaturthi ISRO
By Jiyath Sep 19, 2023 05:48 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சந்திரயான் 3 ராக்கெட்டின் மாதிரியை வடிவமைத்த கீழ்கட்டளை பகுதி மக்கள்.

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று வித்தியாசமான விநாயகர்களை மக்கள் அமைத்து வருகிறார்கள். நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் மக்கள் சிலைகளை வடிவமைக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து சந்திரயான் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவிய விநாயகர்! | Chandrayaan3 Rocket Vinayagar Statue In Chennai I

அந்த வகையில் சென்னை கீழ்கட்டளை பேருந்து நிலையம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவது போல் ஒரு ராக்கெட் மாதிரியையும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 விநாயகர்

லேப்டாப் மூலம் விநாயகர் சந்திரயான் 3 ராக்கெட்டை இயக்கி விண்ணில் ஏவுவதுபோல் அறிவியல் பூர்வமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் இயக்கும்போது ராக்கெட்டானது புகையுடன் 40 அடி உயரம் வரை விண்ணில் பாய்வது போல் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து சந்திரயான் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவிய விநாயகர்! | Chandrayaan3 Rocket Vinayagar Statue In Chennai I

இது அங்கு வரும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைவரும் இதனை ரசித்துப் பார்த்து, தங்களது மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து செல்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி: சென்னையிலிருந்து சந்திரயான் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவிய விநாயகர்! | Chandrayaan3 Rocket Vinayagar Statue In Chennai I

இதுகுறித்து சிலை வைத்தவர்கள் கூறுகையில் "சந்திரயான் 3 வெற்றிக்கு இஸ்ரோவுக்கும்,இந்தியாவின் சாதனைக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக இதை அமைத்துள்ளோம் என்று கூறினார்கள்.