சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Indian Space Research Organisation
By Jiyath Aug 23, 2023 03:30 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | Chandrayaan 3 Success Mk Stalin Greetings To Isro

லேண்டர் சாதனத்தின் இரண்டாவது மற்றும் கடைசி துார குறைப்பு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடந்தது . விக்ரம் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான இறுதி கட்ட வேலைகளை நேற்றிலிருந்து இஸ்ரோ மேற்கொண்டு வந்த நிலையில் இன்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'இந்தியா நிலவில் உள்ளது. சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.

சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது. இது ஒரு மகத்தான சாதனை. அயராது முயற்சி மேற்கொண்ட ஒட்டு மொத்த குழுவுக்கும் பாராட்டுகள். சந்திரயான்-3 வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு மாபெரும் பாய்ச்சல்" என்று தெரிவித்துள்ளார்.