Tuesday, Jul 15, 2025

நிலவுக்கு மிக அருகில் - புதிய புகைப்படங்களை படம் பிடித்து அனுப்பியது சந்திரயான் 3!

India Indian Space Research Organisation
By Jiyath 2 years ago
Report

நிலவின் புதிய புகைப்படங்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது சந்திரயான் 3 விண்கலம்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலவுக்கு மிக அருகில் - புதிய புகைப்படங்களை படம் பிடித்து அனுப்பியது சந்திரயான் 3! | Chandrayaan 3 Captured New Pictures Of Moon

தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நிலவின் புகைப்படங்களையும் இரண்டுமுறை சந்திரயான் 3 புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தது. பூமி சுற்றுவட்டப்பாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்துள்ளது.இதைத் தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையேயான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது. 

புதிய புகைப்பங்கள் 

லேண்டர் சாதனத்தின் இரண்டாவது மற்றும் கடைசி துார குறைப்பு நடவடிக்கை நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான இறுதி கட்ட வேலைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவை மிக அருகில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த படங்கள் நிலவில் லேண்டரை தரையிறக்க பாதுகாப்பான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். 

இன்றைய 4 படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 நிலவில் தரையிறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.