மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முன்னாள் முதலமைச்சர்!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
சந்திரசேகர ராவ்
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகர ராவ் குளியலறையில் வழுக்கி விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தெலுங்கானா
தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சந்திரசேகர ராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதிவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.