சந்திரமுகி படத்தின் நீக்கப்பட்ட காட்சி - எதற்காக நீக்கப்பட்ட்டது தெரியுமா?

Rajinikanth chandramukhi ரஜினிகாந்த் சந்திரமுகி chandramukhideletedscene
By Petchi Avudaiappan Jan 22, 2022 10:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? .. அப்படியான காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்த படம் “சந்திரமுகி”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதல் முறையாக நயன்தாரா நடித்திருப்பார். டைட்டில் ரோலில் நடிகை ஜோதிகா மிரட்டி எடுத்திருப்பார்.

மலையாளத்தில் மோகன்லால், சோபனா நடிப்பில் வெளியான மணிசித்ரதாழு படத்தை இயக்குநர் பி. வாசு கன்னடத்தில் நடிகை செளந்தர்யாவை வைத்து ஆப்தமித்ரா எனும் பெயரில் இயக்கி ஹிட் அடித்தார். அதே படத்தை தமிழில் சந்திரமுகி எனும் பெயரில் எடுத்தார்கள். 

லக லக லக என ரஜினி சிரித்துக் கொண்டு சிம்மாசனத்தில் வந்து அமர்வதையும் நடிகை ஜோதிகாவின் பேய்த்தனமான நடிப்பையும் ரசிகர்கள் தொடர்ந்து 890 நாட்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் திரையரங்கில் ஓடிய சூப்பர்ஸ்டார் படமாக மாறியது சந்திரமுகி. சாந்தி தியேட்டரில் தான் இந்த சாதனை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளை விட தமிழில் இந்த படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க காரணம் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் தான்.

சில மாதங்களுக்கு முன்னதாக சிவாஜி படத்தில் நடிகை சுனைனா நடித்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அந்த காட்சி டிரெண்டானது. அதே போல தற்போது சந்திரமுகி படத்தின் ஓப்பனிங் சண்டை காட்சியில் ஒரு செம மாஸான சீன் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அது டிரெண்டாகி வருகிறது. 

வில்லன் ஆட்களை ஜீன்ஸ் பேன்ட் எந்தளவுக்கு தூக்கினாலும் கிழியாத அளவுக்கு இடம்பெற்ற அந்த சந்திரமுகி ஓப்பனிங் சண்டை காட்சியை தமிழ்ப்படத்தில் சிவா ட்ரோல் செய்திருப்பார். அந்த காட்சியில் மேலும், பில்டப் கொடுக்கும் அளவுக்கு வைக்கப்பட்ட அந்த காட்சியைத் தான் கடைசியில் தூக்கி வீசியுள்ளனர். 

20 பேரை ரஜினி புரட்டி எடுத்த நிலையில், அவர்களை அனுப்பிய வில்லன் தனது புஜ பலங்களை எல்லாம் மடக்கி காட்டி ரஜினி அருகே வந்ததும் காலில் விழுந்து விடுவார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது குச்சி மாதிரி தெரிஞ்சீங்க கிட்ட வந்தா புயல்னு புரிஞ்சிடுச்சு.. 20 பேரை அடிச்ச உங்களுக்கு என்ன அடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என பேசி கும்பிடுப்போட்டு கிளம்பும் அந்த காட்சி தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த காட்சியை சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.