3 முறை கரு கலைத்தேன்... - அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டு முன்பு நடிகை சாந்தினி தர்ணா...!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன் அமர்ந்து துணை நடிகை சாந்தினி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சாந்தினி பரபரப்பு புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி, கடந்த ஆண்டு பாலியல் புகார் ஒன்றை காவல்நிலையத்தில் கொடுத்தார். அந்த புகார் மனுவில், என்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் 3 முறை கருவை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
இதனையடுத்து, மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ராமநாதபுரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்பு, சிறையில் அடைக்கப்பட்ட மணிகண்டன், பலமுறை அவர் அளித்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு, அவருக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, இவ்வழக்கில் சாந்தினி அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்பப் பெற்றுவிட்டதாக தகவல் வெளியானது.
நடிகை சாந்தினி திடீர் தர்ணா
இந்நிலையில், நடிகை சாந்தினி இன்று இராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டனின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்தார். அப்போது, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விரட்டி அடித்தனர். இதனால், அழுது கொண்டே வீட்டுக்கு எதிரே காரில் அமர்ந்தபடி தர்ணாவில் ஈடுபட்டார் நடிகை சாந்தினி.
பின்னர், அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னிடம் கூறியபடி நடந்து கொள்ளாததால் அவரது வீட்டுக்கு வந்ததாக நடிகை சாந்தினி தெரிவித்தார்.