தெரு நாய்களுக்கு உணவு அளித்த பெண் மீது மோதிய கார் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Accident
By Nandhini Jan 16, 2023 01:57 PM GMT
Report

தெரு நாய்களுக்கு உணவு அளித்த பெண் மீது கார் ஒன்று மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மீது மோதிய கார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சண்டிகரில் இளம்பெண் தேஜஸ்விதா (25) என்பவர் தினமும் தனது வீடு அருகே தெருவில் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம்.

இதுபோல், தேஜஸ்விதா வழக்கம்போல் தெருநாய்களுக்கு உணவு அளித்து கொண்டிருந்த போது, அவரை நோக்கி விரைந்து வந்த கார் அவர் மீது மோதியது. அந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

பலத்த காயமடைந்த அவரை, அவரது தாயார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

chandigarh-woman-accident-car