திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நபர் - CPR கொடுத்து உயிரை காப்பாற்றிய IAS அதிகாரி

Viral Video India
By Nandhini Jan 19, 2023 08:24 AM GMT
Report

CPR கொடுத்து உயிரை காப்பாற்றிய IAS அதிகாரி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

சண்டிகரில் திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நாற்காலியில் சரிந்தார். இதைப் பார்த்த ஐஏஎஸ் அதிகாரி யாஷ் பால் கர்க் அவருக்கு சிபிஆர் கொடுத்து அந்த மனிதரின் உயிரைக் காப்பாற்றினார். பிறகு அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனைக்கு சென்று அந்த நபரின் உடல்நிலையை குறித்து அறிந்து கொண்டார். தன் உயிரை காப்பாற்றிய ஐஏஎஸ் அதிகாரிக்கு அந்த நபர் மனதார நன்றி தெரிவித்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஐஏஎஸ் அதிகாரிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

chandigarh-ias-officer-saved-a-human-life