பாத்ரூமில் ரகசிய கேமரா; 60 மாணவிகளின் குளியல் வீடியோ லீக்கான சம்பவம் - நெட்டிசன்களுக்கு சோனுசூட் வேண்டுகோள்

India
By Nandhini Sep 19, 2022 08:48 AM GMT
Report

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து 60 மாணவிகளின் குளிப்பதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தையடுத்து,  நெட்டிசன்களுக்கு நடிகர் சோனுசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாத்ரூமில் ரகசியமாக கேமரா

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், கல்லூரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் ரகசிய கேமரா வைத்து சக மாணவிகள் குளிப்பதை வீடியோவாக எடுத்து தன் காதலனுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், MBA முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு மாணவிகள் குளிப்பதை வீடியோவில் பதிவு செய்து அதை தன் காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த சம்பவம் பல நாட்களாக அரங்கேறியுள்ளது. இந்த மாணவி அனுப்பிய வீடியோ ஒவ்வொன்றாக தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குளியல் வீடியோ பரவியதை அறிந்த சில மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி கைது

இந்நிலையில், இந்த கேவலமான செயலில் ஈடுபட்ட மாணவி மீது நடவடிக்கை எடுக்கும்படி சண்டிகரில் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சோனு சூட் 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாம் நமது சகோதரிகளுடன் நின்று பொறுப்புள்ள சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நேரம் இது. இது நமக்கு சோதனையான காலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல. பொறுப்புள்ளவராய் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.