வாட்டி வதைக்கும் வெயில்; இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TN Weather
By Thahir
இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தற்போது, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை தருமபுரி, ஈரோடு, சேலம், கடலூர், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த மழை வெப்பத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.