அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் மழை - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
Kanchipuram
Chennai
Department of Meteorology
TN Weather
By Thahir
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய உள்ள பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரு நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யவுள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள பதிவில் மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர்,அம்பத்துார், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.