தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதனமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு
நீலகிரி,கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ கூடலுார் பஜாரில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென் மேற்கு, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
சூறாவளி காற்று வீசக்கூடும்
அதே போல, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நாளை 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று காற்று வீசக்கூடும்.
வரும் 27-ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும், லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.