அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை..!
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜுலை 8 வரை தமிழகம் புதுச்சேரி பல்வேறு மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது