5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Chennai Department of Meteorology TN Weather
By Thahir Jul 08, 2023 09:55 AM GMT
Report

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (08.07.2023) மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Chance of moderate rain in Tamil Nadu

நீலகிரி மற்றும் கோயம்புத்துார் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் 

நாளை (09.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என்று கூறப்பட்டுள்ளது.