தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

TN Weather Weather
By Thahir Feb 02, 2023 09:12 AM GMT
Report

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு 

வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தமிழக எல்லையை கடந்து தற்போது இலங்கையை கடந்துள்ளது.

நாளை குமரி கடலில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Chance of heavy rain in southern districts

இன்று தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சிவகங்கை, கன்னியாகுமரி பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூடுதல் தகவலை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.