20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Chennai
By Thahir Oct 16, 2022 09:56 AM GMT
Report

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chance of heavy rain in 20 districts today

இதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்துார், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல்,ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேகமூட்டம் 

மேலும் நாளை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், கடலுார், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.