தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!
Chennai
By Thahir
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேல நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு,புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை,திருப்பூர்,சேலம்,கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி,தருமபுரி,தென்காசி,திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.