தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - தமிழக அரசு அறிவுறுத்தல்

Chennai Department of Meteorology Regional Meteorological Centre
By Thahir Nov 19, 2022 06:46 AM GMT
Report

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை 

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chance of heavy rain for 3 days in Tamil Nadu

இந்த நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.