தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தமிழகம்,புதுச்சேரியில் 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்தது.
அதே சமயம் , கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் , அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் என்றும் ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.