சிஎஸ்கே அணிக்கு வரும் அதிரடி இலங்கை வீரர் யார்ன்னு தெரியுமா? இதோ... வெளியான அறிவிப்பு...!
சிஎஸ்கே அணிக்கு வரும் அதிரடி இலங்கை வீரர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 போட்டி -
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை வந்தடைந்தார் தோனி
நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சமீபத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிஎஸ்கே அணிக்கு வரும் அதிரடி இலங்கை வீரர்
இந்நிலையில், ஜேமிசனுக்கு மாற்று வீரன் யார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சணக்காதான். இவர் பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் அபாரமாக விளையாடுவார். இவர் வந்தார் நிச்சயம் சிஎஸ்கே வலுப்பெறும். சணக்காவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டுவர தோனிதான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், இலங்கை வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாட கூடாது என்று உத்தரவிட்டார். தற்போது, 3 ஆண்டுகள் அப்படி விளையாடும் பட்சத்தில் அது தமிழர்களின் உணர்வை பாதிக்கும் வகையில் இருக்கும் எனவும் அவர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே, 2 இலங்கை வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டுவருவதே தற்போது பிரச்சினையாக இருக்கும்பட்சத்தில் 3வது ஒரு வீரராக சனக்காவை சேர்த்தால் ஒருவேளை சென்னையில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.