சம்பல் நதியில் முதலைகள் மத்தியில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவன் - திக்.. திக்... வீடியோ காட்சி

Viral Video
By Nandhini Aug 25, 2022 08:44 AM GMT
Report

சம்பல் நதியில் முதலைகள் மத்தியில் சிக்கிக்கொண்ட சிறுவனின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உயிருக்கு போராடிய சிறுவன்

அந்த வீடியோவில், சாம்பல் நதி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி, ராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனை ஆற்றில் கலக்கிறது.

இந்த சம்பல் நதியில் முதலைகள் மத்தியில் ஒரு சிறுவன் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடுகிறான். காப்பாற்றுங்கள் என்று கத்தி கூச்சலிட்ட அச்சிறுவனை பிடிக்க அருகில் சில முதலைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.

அப்போது, அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிறுவன் கத்தி கூச்சலிடுவதைப் பார்த்து, கண் இமைக்கும் நேரத்தில் நொடிப்பொழுதில் படகில் விரைந்து வந்து சிறுவனின் உயிரை காப்பாற்றுகின்றனர். 

Chambal river - viral video

நெட்டிசன்கள் பாராட்டு

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், நதியில் முதலைகள் மத்தியில் சிக்கிக்கொண்ட சிறுவனை காப்பாற்றிய மீனவ வீரர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி என்று பதிவிட்டு வருகின்றனர்.