அரிசி கிடைக்கலன்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடுங்க மக்களே- இலங்கை மந்திரி பேச்சால் சர்ச்சை
இலங்கை நாட்டின் நீர் பாசனத்துறை அமைச்சரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்சே செட்தியாளர்களை சந்தித்து பேசினார் .
அப்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வருவதை என்பதை ஏற்றுக்கொண்ட அவர் , இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பாசிப்பயிறை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறும்போது,
‘இலங்கை 2023-ம் ஆண்டில் கடுமையான பட்டினியை எதிர்நோக்கும் என்பதையே மந்திரி சமல் ராஜபக்சேவின் பேச்சு வெளிப்படுத்துகிறது’ என்றார்.
மேலும் 1970 முதல் 1977-ம் ஆண்டு வரையிலான சிறிமாவோ பண்டாய நாயக்கே பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில் கடுமையான உணவு பஞ்சத்தால் மக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டனர்
சமல் ராஜபக்சேவின் இந்த பேச்சு அந்த மோசமான அனுபவத்தைநினைவுப்படுத்துவதாக கூறினார்.