குட்கா கடத்தலைத் தடுப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

By Swetha Subash May 31, 2022 08:55 AM GMT
Report

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று  சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

குட்கா கடத்தலைத் தடுப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! | Challenges In Seizing Gutka Smuggle Ma Subramanian

"இதில் சவாலான விஷயம் என்னவென்றால், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க தடை இல்லை.

இதனால் வியாபாரிகள் எளிதாக கர்நாடகாவிற்குச் சென்று வியாபாரம் செய்வதற்காக அங்கிருந்து அவற்றை வாங்கி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை நேரடியாக எடுத்து வந்தால், காவல் துறையினர் சுங்கச்சாவடிகளில் பிடித்து விடுவர் என்ற காரணத்தால், பெங்களூருவில் இருந்து வருகின்ற காய்கறி வண்டிகளில் மறைத்துவைத்து தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர்.

குட்கா கடத்தலைத் தடுப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! | Challenges In Seizing Gutka Smuggle Ma Subramanian

இதை தினந்தோறும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் காவல் துறையினரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.