பிரபல நடிகர் சலபதி ராவ் மாரடைப்பால் உயிரிழந்தார் - ரசிகர்கள் பேரதிர்ச்சி...!
பிரபல தெலுங்குப் பட நடிகர் சலபதி ராவ் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சலபதி ராவ்
தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகர் சலபதி ராவ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு திரையுலகத்தினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் சலபதி ராவ் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சலபதி ராவ் நடித்தார். இதனால், தமிழ் மக்கள் மத்தியில் இவர் நன்கு அறியப்பட்டார்.
நடிகர் சலபதிராவ் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால், இவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை இவருக்கு மாரடப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினத்தினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..! IBC Tamil
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil