சத்துணவில் சக்கரை பொங்கல் - அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கருணாநிதி பிறந்த நாளன்று சக்கரை பொங்கல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போன்று கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சட்டமன்றத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில், அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜுன் 3 ஆமு் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan