உலகக் கோப்பையில் இடம்பிடித்த யுஸ்வேந்திர சாஹலின் மனைவி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்?
சுழற்பந்து வீச்சாளரான சாஹலின் மனைவி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஆனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை. இதனால் அவரின் ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் சாஹலின் மனைவியான தனஸ்ரீ வர்மாவுக்கு உலகக்கோப்பை தொடரில் பங்காற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தனஸ்ரீ பிரபல யூடியூபர் ஆவார். சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூடியூபில் பிரபலமானவராக இருந்தார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார்.
நடனமாடும் மனைவி
மேலும், நடனமாடிய வீடியோக்களை தனது யூடியூப் சானலில் பகிர்ந்து வருகிறார். தனஸ்ரீயை சுமார் 55 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள். அவரின் சிறப்பான நடன திறமையால் இப்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த உள்ள ஐசிசி, அதற்கான பாடல் ஒன்றை வெளியிட உள்ளது. அந்தப் பாடலில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாட உள்ளார். அவருடன் தனஸ்ரீ வர்மாவும் நடனமாட இருக்கிறார்.
அந்த பாடலுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரிதம் இசையமைத்துள்ளார். இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்க சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு, அவரது மனைவிக்கு கிடைத்துள்ளதா? என்ற ஆச்சரியம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.