‘குடிபோதையில் அந்த வீரர் என்னை கொலை செய்ய பார்த்தார்’- உண்மையை கூறி அதிர்ச்சியளித்த யுஸ்வேந்திர சாஹல்
கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் என்னை கொலை செய்ய பார்த்தார் என இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகீர் தகவலை தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2022-ல் தனது புதிய அணியான ராஜஸ்தானில் சிறப்பாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை நடந்த போட்டிகளில் முக்கிய கட்டங்களில் நேர்த்தியாக பந்து வீசி, விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் "கம்பாக் ஸ்டோரிஸ் " என்ற தலைப்பில் பேசியிருந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறது.
Royals’ comeback stories ke saath, aapke agle 7 minutes hum #SambhaalLenge ?#RoyalsFamily | #HallaBol | @goeltmt pic.twitter.com/RjsLuMcZhV
— Rajasthan Royals (@rajasthanroyals) April 7, 2022
அதில், 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடியபோது, பெங்களூரில் நடந்த ஒரு கெட் டுகதரில் கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை எனவும், அவர் தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று பால்கனியில் இருந்து தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
15-வது மாடியிலிருந்த தன்னை கண்டதும் சிலர் ஓடி வந்து காப்பாற்றியதாகவும், அந்த சமயத்தில் தான் ஒருவித மயக்கம் அடைந்ததோடு, நூலிழையில் உயிர் தப்பித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருந்த சாஹல் பின்னர் ஆர்சிபியில் சேர்ந்து எட்டு ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.