இது 3-வது தடவை..பழகி போச்சு... உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து சஹல்
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறத்ததை குறித்து பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் 5-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை என 10 அணிகள் பங்கேற்கின்றன.
2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடைபெறும் காரணத்தால், இந்த தொடரில் இந்திய அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் என இந்திய அணியின் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து காத்துள்ளனர். இந்த தொடருக்கான இந்த அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை. இந்தியாவில் சுழற்பந்துவீச்சு நன்றாக ஈடுபடும் என்ற போதிலும் அணியில் குல்தீப், அஸ்வின் போன்றோர் இடம்பெற சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை.
சாஹல் கருத்து
இது குறித்து தற்போது இங்கிலாந்தில் கென்ட் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் சாஹல் பேசும் போது, "அணியில் 15 பேர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதை புரிந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், அணியில் இடம்பெறாதது கொஞ்சம் ஏமாற்றம் தான் என கூறி ஆனால், தான் அதனை கடந்து வந்து விட்டதாக தெரிவித்தார்.
தனக்கு இது பழகிவிட்டது என்று கூறி, ஏனெனில் 3-வது முறையாக உலகக் கோப்பை அணியில் தான் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதன் காரணமாக தான் இப்போது இங்கு வந்துள்ளதாக கூறி கிரிக்கெட் விளையாட வேண்டும் - அது எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும் என்றார். சிவப்பு பந்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது, அதில் கவனம் செலுத்தி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் கவனத்தை வைக்கிறேன் என்று கூறிய சாஹல் இது நல்ல அனுபவமாக இருக்கும் என கருதுவதாக தெரிவித்தார்.