கோவையில் சாதி, மதம் அற்றவர் என மகளுக்கு சான்றிதழ் பெற்ற பெற்றோர் - குவியும் வாழ்த்து
By Nandhini
கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மூன்றரை வயது மகள் வில்மாவுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றிருக்கிறார்.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், என் 3 வயது மகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி சான்றிதழ் இல்லாததால் அனுமதிக்க மறுத்தனர். எனவே, இந்தச் சான்றிதழை பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் செயலுக்கு பலர் ஆதரவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.