மக்களே..ஆதார் கார்ட் ஜெராக்ஸ்-ஐ யாரிடமும் வழங்க வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!

By Swetha Subash May 29, 2022 08:48 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அந்த வகையில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனியான அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்கலாம் என்ற நோக்கத்தோடு ஆதார் அடையாள எண் முறை கொண்டுவரப்பட்டது.

மக்களே..ஆதார் கார்ட் ஜெராக்ஸ்-ஐ யாரிடமும் வழங்க வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை! | Centre Warns Of Sharing Aadhaar Card Zerox

அதன்படி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 எண்கள் தாங்கிய, தங்களின் புகைபடத்துடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில்,

மக்களே..ஆதார் கார்ட் ஜெராக்ஸ்-ஐ யாரிடமும் வழங்க வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை! | Centre Warns Of Sharing Aadhaar Card Zerox

“ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை யாரிடமும் வழங்க வேண்டாம். ஆதார் நகலை பெறும் நிறுவனங்கள் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். மாஸ்கட் (Masked) எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டையினை பயன்படுத்தவும்.

பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ-ஆதாரை டவுன்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆதார் விவரங்கள் தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும். " என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.