வென்றது விவாசாயிகள் போராட்டம் : வேளாண் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

farmlaw centretable
By Irumporai Nov 29, 2021 06:59 AM GMT
Report

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. ச 3 வாரங்கள்   இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது

இன்று சபாநாயகர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

 இந்த நிலையில்3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக குருநானக் ஜெயந்தி அன்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.