தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் தீவிரமாக பரவும் டெங்கு: விரைந்தது மத்திய நிபுணர் குழு

dengue
By Fathima Nov 03, 2021 01:12 PM GMT
Report

இந்தியாவின் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதால், மத்திய நிபுணர் குழு அம்மாநிலங்களுக்கு விரைந்துள்ளது.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 991 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

டெங்கு பரவல் ஆபத்தானது என்பதால் முன்கூட்டியே உயிரிழப்புகளை தடுக்க மத்திய நிபுணர் குழு அம்மாநிலங்களுக்கு விரைந்துள்ளது.

இக்குழுவினர், டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாநில அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பர்.

மேலும் மாநில சுகாதார துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, நோய் பரவும் இடங்களை அறிந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் மத்திய சுகாதாரத்துறை அதீத கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.