கலால் வரியை குறைத்த மத்திய அரசு... தமிழகத்தில் குறையும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அதன் விலை குறையும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனிடையே வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதாவது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 8ம் , டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு ரூபாய் 6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்பின் மூலம் நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 9.5ம், டீசல் ரூ. 7ம் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் மாநில அரசுகள் வரிக்குறைப்பை அமல்படுத்த தான் வலியுறுத்துவதாக நிர்மலா2 சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.