மார்ச் 31-ம் தேதிக்குள் முழுமையாக முடிவுக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அறிவிப்பு

coronarestrictions centretoliftrestrictions march31
By Swetha Subash Mar 23, 2022 08:57 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய போது வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மார்ச் 31-ம் தேதிக்குள் முழுமையாக முடிவுக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அறிவிப்பு | Centre Allows State To Lift Corona Restrictions

அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

இந்தியாவை பொறுத்தவரை ஊரடங்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை வரும் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்தை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாஸ்க் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற நடைமுறைகள் தொடரும் என்றும்,

இதர கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாகவும், மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.