Friday, Apr 4, 2025

மத்திய அமைச்சர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை

Public Exams Anbil Mahes Ponmudi Rajnath singh
By mohanelango 4 years ago
mohanelango

mohanelango

in கல்வி
Report

பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளது.

ஆனால் கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.