மத்திய இணை அமைச்சராகிறார் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன். பாஜகவின் புதிய தலைவராக விரைவில் தேர்வாகிறார் அண்ணாமலை ஐபிஎஸ்!
தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய இணை அமைச்சராவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இதில் 42-ம் இடத்தில் மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்கவுள்ளார்.

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றால், தமிழக பாஜக தலைவர் ஐ.பி.எஸ். அண்ணாமலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் தலைமையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வானதால் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் அவர் டெல்லியிலே முகாமிட்டிருந்துள்ளார்.