உத்தவ் தாக்கரேவை அடிப்பேன் என சொன்ன மத்திய அமைச்சருக்கு நேர்ந்த கதி..!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே நிகழ்ச்சி ஒன்றில் சுதந்திர தின உரையின் போது எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் அவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர்.
தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தை நாராயண் ரானே அணுக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் மும்பையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹாத் நீதிமன்றத்தில் போலீசார் அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.