மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கடிதம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை சிறப்பு அதிகாரியை நியமித்து ஒன்றை சாளர முறையில் விரிவுபடுத்த கோரி திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சச்ர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், முந்தைய தமிழக அரசு மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக கட்டிட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் பணிகளை துவக்க சிறப்பு அதிகாரிகளை உடனடியாக அமைத்திட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை சிறப்பு அதிகாரியை நியமித்து ஒன்றை சாளர முறையில் விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
