மக்களே உஷார் .. அதிகரிக்கும் கொரோனா - தமிழகத்திற்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு
கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது, இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது.
தமிழகத்திற்கு கடிதம்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது, இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது.
கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.